The New Stuff

Public Aug 03

குழந்தைகளை காப்பாற்றி விட்டு உயிரிழந்த பெண்; தாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்!

mother died, moments throwing, children safety, house fire

தீப்பற்றிய தனது வீட்டிலிருந்து தன் குழந்தைகளைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை இழந்த பெண்ணின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது., சீனாவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்த குறித்த பெண்ணின் வீட்டில் திடீரென தீப்பிடித்தது, சமயோகிதமாக செயல்பட்ட குறித்த தாய் சில பெட் ஷீட்களை எடுத்து ஜன்னல் வழியாக கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் வீசினார்.

அவர்கள் அதை விரித்துப் பிடித்துக் கொள்ள, அவர் தனது குழந்தைகளை ஒவ்வொன்றாக கீழே வீசினார். கீழே நின்றவர்கள் குழந்தைகளை பெட் ஷீட் உதவியால் பிடித்துக் கொண்டார்கள். அந்த தாயையும் அவர்கள் கீழே குதிக்கச் சொல்ல, அதற்குள் அறைக்குள் நிறைந்து விட்ட புகையால் அவர் மூச்சுத்திணறி அறைக்குள்ளேயே விழுந்துவிட்டார். இதற்குள் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

ஆனால் அவரை காப்பாற்ற இயலவில்லை. தனது புத்தி சாதுர்யத்தால் தனது குழந்தைகளை மீட்ட அந்த தாய் உயிரிழந்து விட்டார். குழந்தைகளை அவர் ஜன்னல் வழியாக வீசும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Key Words: mother died, moments throwing, children safety, house fire

Adults Only

Cinema

Medical

Politics

Public

Study

Technology