The New Stuff

Public Sep 28

கனவுகளில் கையடக்க தொலைப்பேசிகள் தோன்றாமல் இருப்பதன் காரணம் தெரியுமா?

mobile phone, dreams, modern life

நம் கனவுகளில் திறன்பேசிகள் ஏன் தோன்றாமல் இருக்கின்றன? இது தொழில்நுட்பத்தின் காலம்.

 
சிறுவர் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரின் கைகளிலும் திறன்பேசி இருக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளோம்.
 
இத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி, தினந்தோறும் பயன்படுத்தினாலும், பெரும்பாலானோர் இக்கருவியைக் கனவுகளில் காண்பதில்லை. ஏன்?
 
கனவுகள், நம் மனத்தை உறுத்தும் பிரச்சினைகளையும் பயத்தையும் தொகுத்துக் கொண்டு அவற்றிலிருந்து எப்படி மீளலாம் என்பதுபற்றிச் சிந்திக்க உதவுகின்றன.
 
எதிர்காலத்தில் மன உளைச்சலை உண்டாக்கும் சம்பவங்கள் ஏற்பட்டால், அதற்காக நம்மைத் தயார்ப்படுத்த கனவுகள் உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
திறன்பேசிகள் கனவில் தோன்றாமல் இருப்பது, பெண்களின் கனவுகளில் ஏற்படுவதை விட ஆண்களின் கனவுகளில் அதிகமாக ஏற்படுகிறது.
 
அவ்வாறு திறன்பேசியுடன் கனவு கண்டாலும், அண்மையில் மறைந்த ஒருவர் கனவு காண்பவரைத் திறன்பேசியின் மூலம் கூப்பிடுவதாகவே பெரும்பாலும் கனவு அமையும்.
 
நமது கனவுகளில் தோன்றும் காட்சிகள் பழங்காலத்திலிருந்து இன்றுவரைக்கும் பொருந்தும் விஷயங்களாகத்தான் இருக்கும்.
 
திறன்பேசி, தொழில்நுட்பம் போன்றவை அண்மையில் தோன்றிய கண்டுபிடிப்புகள் என்பதால், அவை நம் கனவுகளில் பெரும்பாலும் தோன்றுவதில்லை.
 
அவை நம் ஆழ்மனத்துக்குள் ஊடுருவிச் சென்று பதிய இன்னும் பல பத்து ஆண்டுகள் ஆகக் கூடும். தொழில்நுட்பம் தவிர, விமானம், வாகனம் போன்ற இயந்திரங்களைப் பற்றியும் பலர் கனவு காண்பதில்லை.
 
கனவுகள் எனப்து ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்துள்ளது என்பதால், இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Key Words: mobile phone, dreams, modern life

Adults_Only

Cinema

Medical

Politics

Public

Study

Technology